செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும் நாம் செயல்களை சரியான காரணங்களுக்காக செய்ய வேண்டும். சிறந்த காரணம் என்னவெனில், அது நமக்கு உபயோகமாக இருப்பதுடன் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிப்பது தான். ஒரு செயலை வெறும் புகழ்ச்சிக்காகவும் புகழுக்காகவும் மட்டும் செய்தால், நாம் ஏமாற்றமடையக் கூடும். ஆனால், அதை நாம் விரும்புவதாலும், நாம் மன நிறைவு பெறுவதாலும் செய்தால், விளைவுகள் என்னவானாலும், நமது திறம்பட்ட முயற்சிகள் ஒரு காலும் வீணாகாது. மற்றவர்களும் அதை பாராட்டினால், அது நமக்கு மேலும் மகிழ்ச்சி தான்.
நான் எப்போதும் இருக்கிறேன்
நான் எப்போதும் இருக்கிறேன் பிரபலமான பழமொழி என்னவென்றால், “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்!” என்பதாகும். ஆனால் நான் தூக்கத்தில் நினைப்பதில்லை. அதனால் தூக்கத்தில் நான் இல்லை என்று பொருளா? உண்மை என்னவெனில், நான் தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும் உள்ளேன். எண்ணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்போதும் இருக்கிறேன்.
இன்று திறம்பட வாழலாம்
இன்று திறம்பட வாழலாம் கடந்த காலத்தின் நிகழ்வுகள் மறைந்து விட்டன. அவற்றைப் பற்றி யோசிப்பதில் ஒரு பலனுமில்லை. கடந்த காலத்தைப் பற்றி வேதனைப் படுவதும் வருந்துவதும் முற்றிலும் பயனற்றது. இன்று எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். நமது மனப்பாங்கு நேர்முறையாக இருக்க வேண்டும், நோக்கம் நன்னம்பிக்கையுள்ளதாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சந்தோஷம் விரும்புகிறோமோ அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்.
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் திட நம்பிக்கை இருந்தால், அதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கட்டாயம் மற்றவரின் சொற்களைக் கேட்டுக் கொள்ளுங்கள், அதில் ஏதாவது பயனுள்ளதா என்றும் பாருங்கள். ஆனால், உங்களைப் பற்றி திடமான நம்பிக்கை வைத்துக் கொண்டு, நீங்களே தீர்மானம் செய்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு மருத்துவரென்றால், ஒருவித சிகிச்சையை நம்புகிறீர்கள் என்றால், மற்றவர் ஒருவர் வேறொரு மருத்துவரின் சிகிச்சையை புகழ்ந்து சிலாகித்தால், அதை மதிப்பிடுங்கள்; ஆனால், உங்கள் முறை சரியானதென்று நீங்கள் திடமாக நம்பினால், அதை விடாமல் …
உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு
உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு ஞானமுள்ள உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கும். அவை தற்போது தேவையில்லை, இப்போது எல்லாம் நலமாக உள்ளது என்று தோன்றினாலும், ஞானியரின் மேன்மையான அறிவுரைகளைப் படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, சிந்தனை செய்தவாறே இருப்பது தான் விவேகம். ஏனெனில், எதிர்காலத்தில், நீங்கள் மிகவும் துன்புறும்படி ஏதாவது நிகழ்ச்சிகள் நிகழலாம். அப்போது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமலோ, அல்லது சாந்தமாக செயல்பட முடியாமலோ போகலாம். ஆனால், எப்போதும் தாமே சாந்தமும் அமைதியும் கொண்ட …
சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்
சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும் சரியான சமயத்தில் காட்டும் கருணை நெடுந்தூரம் செல்லும். எப்போது கருணை தேவைப்படுகிறதோ, அப்போது அளிப்பது நல்லது; நமக்கு சௌகரியப்படும்போது அல்ல. செயல்களில் அன்பு தருவது – நோயுற்றவர்களை பராமரிப்பது, உணவளிப்பது, சுத்தம் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது போன்ற உதவிகள் மிகவும் சிறந்தது தான். ஆனால், வருத்தப்படுவோருக்கும் துயரத்தில் ஆழ்ந்தோர்க்கும் சொற்களிலும், ஒரு ஆதரவான அரவணைப்பிலும், நட்பிலும், உற்சாகப்படுத்துவதிலும் கருணை காட்டுவது அதை விட மேன்மையானது. கருணையே ஒரு சக்தி வாய்ந்த மருந்தாகும்.
இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்
இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள் இயற்கையுடன் நேரம் செலுத்துங்கள். கடற்கரை, பூங்கா, பச்சைப் பசேலென்ற புல்வெளி, நயத்தகு மரங்கள், அழகான மலர்கள் கொண்ட நந்தவனங்கள், ஓடை, நதி, இவையெல்லாம் தான்மை உணர்வின்றி, அமைதியாக உள்ளன. அவற்றோடு நாம் இருக்கும்போது, அவற்றின் அமைதியும் நிம்மதியும் நம்முடன் இணைந்துக் கொள்கின்றன. நாமும் நிம்மதி பெறுகிறோம்.
மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம்
மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம், அல்லது உங்களுக்குப் பிரியமுள்ள நண்பர், உறவினரிடம், மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம். அதற்கு அவ்வளவு தகுதியில்லை. உங்கள் மன நிம்மதியும், சந்தோஷமும் இழப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடல் நலனுக்கும் அது கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் வரையில் மட்டுமே அதை நினவில் வைத்துக் கொள்வார்கள். அவை கடந்தவுடன் அவற்றை மறந்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். அது போல இருக்க முயலுங்கள். …
போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்
போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள் உங்கள் அன்பிற்குரியவரை – அவனையோ, அவளையோ – போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள். அவர் மீதுள்ள உங்கள் அன்பை சொற்களிலும் செயல்களிலும் காட்டுங்கள். இல்லையெனில் அவரை, அன்பும் பாராட்டுதலும் காட்டும் வேறு எவரிடமோ இழந்து விடக்கூடும். அவர் வேறு யாரின் அன்பையும் பரிவையும் நாட மாட்டார் என்று நீங்கள் சுயதிருப்தியுடன் சட்டை செய்யாமல் இருந்தால், நீங்கள் தவறாக இருக்கக் கூடும். இந்த விதத்தில் தான் ஒரு உறவு உடைகிறது, அல்லது தோல்வி அடைகிறது. நீங்கள் இளவயதினராக இருந்தாலும், வாழ்வின் …
ஆசையை பின்பற்று, எந்த விளைவுக்கும் தயாராக இரு
ஆசையை பின்பற்று, எந்த விளைவுக்கும் தயாராக இரு சிலர் சொல்கிறார்கள்… “ஆசைப்படு! மனதின் கனவுகளைத் தொடர்ந்துச் செல்!” ஏனெனில் இதைக் கேட்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவர் உண்மை சொல்பவராகவோ, விவேகமுள்ளவராகவோ இருந்தால், மேலும் சொல்வார்…”மன லட்சியங்களை, ஆசைகளைப் பின்பற்று! ஆனால், எந்த விளைவுக்கும் தயாராக இரு. ஏனெனில் நாம் முயற்சிகள் செய்யலாம், ஆனால் பலன்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. விளைவு எதுவானாலும் நீ முன் போலவே தான் உள்ளாய், சந்தோஷமாக இருப்பதில் மாற்றம் அவசியமில்லை.” வசுந்தரா
எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது
எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது எண்ணங்கள் கடலின் அலைகள் போல மனதில் ஏற்படுகின்றன. அவை நமது மன நோக்கத்தைச் சார்ந்தே எழுகின்றன. நமது நோக்கம் தவறாக இருந்தால், நாம் எல்லாவற்றையும் தவறாகவே தான் காண்கிறோம். நமது நோக்கம் சரியாக இருந்தால், எதையும் சரியாக, சீரான விதத்தில் காண்கிறோம். விவேகமுள்ளவர்களின் மதி நுட்பமான சொற்களை அறிந்துக் கொண்டு சிந்தித்தால், நமது நோக்கம் அறியாமையிலிருந்து விவேகத்திற்கு மாறும்.
அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை
அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை யாராவது ஏதாவது ஒன்றில் வெற்றியடைவதைக் கண்டால், அவர்களுடன் ஒப்பிட்டு ஒருவர் தன்னைப் பற்றி எந்த விதத்திலும் குறைவாக எண்ண வேண்டாம். “அவர்களின் வெற்றி எனது தோல்வி இல்லை” என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டால், கவலைப் பட அவசியமே வராது.