திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்
உங்களுக்கு ஏதாவது ஒன்றில் திட நம்பிக்கை இருந்தால், அதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கட்டாயம் மற்றவரின் சொற்களைக் கேட்டுக் கொள்ளுங்கள், அதில் ஏதாவது பயனுள்ளதா என்றும் பாருங்கள். ஆனால், உங்களைப் பற்றி திடமான நம்பிக்கை வைத்துக் கொண்டு, நீங்களே தீர்மானம் செய்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக, நீங்கள் ஒரு மருத்துவரென்றால், ஒருவித சிகிச்சையை நம்புகிறீர்கள் என்றால், மற்றவர் ஒருவர் வேறொரு மருத்துவரின் சிகிச்சையை புகழ்ந்து சிலாகித்தால், அதை மதிப்பிடுங்கள்; ஆனால், உங்கள் முறை சரியானதென்று நீங்கள் திடமாக நம்பினால், அதை விடாமல் கடைப்பிடியுங்கள். தயக்கமுற வேண்டாம்.
இது வாழ்க்கையில் எல்லாவற்றிலும் எல்லோருக்கும் உண்மை தான்.