மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம்
நீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம், அல்லது உங்களுக்குப் பிரியமுள்ள நண்பர், உறவினரிடம், மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம். அதற்கு அவ்வளவு தகுதியில்லை. உங்கள் மன நிம்மதியும், சந்தோஷமும் இழப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடல் நலனுக்கும் அது கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் வரையில் மட்டுமே அதை நினவில் வைத்துக் கொள்வார்கள். அவை கடந்தவுடன் அவற்றை மறந்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். அது போல இருக்க முயலுங்கள். ஏனெனில், காலத்தை வீணாக்க வாழ்க்கை மிகவும் குறுகியது.