நேரம் பறந்து செல்கிறது நேரம் பறந்து செல்கிறது. உங்கள் வாழ்வில் மிகுந்த காலம் இருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் வாழ்க்கை கணிக்க இயலாதது; முன்னறிந்து கூற முடியாதது. எனவே உபயோகமில்லாத விஷயங்களிலும், மன அமைதியைக் கெடுக்கும் மனிதர்களுடனும், கடந்த காலத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதிலும் நேரத்தை வீணாக்க வேண்டாம். தளரா நம்பிக்கை கொள்ளுங்கள். நாளை நீங்கள் கவனித்துக் கொள்ளப் படுவீர்கள் என்று அறிந்துக் கொண்டு, இன்று முழுதாக வாழுங்கள்.
விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்
விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும் தவறுகள் ஏற்படுகின்றன. எல்லோரும் தவறுகள் செய்கின்றனர். அது பரவாயில்லை. எது சரியில்லையென்றால், செய்த தவறுக்கு கூடிய சீக்கிரம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான். ஏதோ கட்டுப்பாடு இழந்து சொற்களோ செயல்களோ நிகழ்ந்து விட்டன. ஒருவேளை சோர்வு அல்லது அதிக கோபம் இருந்திருக்கலாம். மற்றவரும் பதிலுக்கு உங்களைப் போலவே நடந்துக் கொள்ளலாம், அல்லது அமைதியாக இருக்கலாம். ஆனால், சம்பவத்தை ஆரம்பித்தது நீங்களானால், அல்லது முதலாவதாக மற்றவரை துன்புறுத்தும் விதத்தில் பேசியதோ ஏதாவது செய்ததோ நீங்களானால், முதலில் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது …
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். உங்களைப் போல யாரும் கிடையாது. நீங்கள் இந்த அற்புத உண்மையை உபயோகப்படுத்தி, உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள ஆக்கப்பூர்வமான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழச் செய்யலாம்; அல்லது உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள எதிர்மறையான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்தத்துடன் வாழச் செய்யலாம்.
சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்
சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள் ஒரு உறவு அல்லது மண வாழ்வில், சுய கருத்தை நிரூபிப்பதை விட, அல்லது எப்போதும் தன் இச்சைப்படியே நடப்பதை விட, ஒத்துழைத்து இசைந்து செல்வது முக்கியம். தன் சொந்த கருத்து தான் சரியென்று நிரூபிப்பதால் தான்மை உணர்வின் அகந்தைக்கு ஒரு ஊட்டம் கிடைக்கலாம்; ஆனால், அவ்வப்போது மற்றவரை மகிழ்விப்பதைச் செய்யாவிட்டால், அது அந்த நாள் முழுவதையும், அல்லது நல்லுறவையே கூட பாதிக்கக் கூடும். சாமர்த்தியமாக இருங்கள். சந்தோஷத்திற்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்கள். அதனால் குறைவேதும் இல்லை.
ஒரு குறிக்கோள் உள்ளது
ஒரு குறிக்கோள் உள்ளது இந்த உலகத்தில் நீங்கள் இருப்பதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மற்றவர்களைப் போலவே மிகவும் முக்கியமானவர். மற்ற எவரையும் உம்மைப் பற்றி இதற்கு மாறாக சொல்லவோ, உங்களைத் தாழ்வாக நடத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்கள் சொந்த இயல்பில் வாழுங்கள். மேலும், உங்களுக்காக உள்ள குறிக்கோள் நிறைவேற உங்களை உதவுங்கள்.
நிரம்பிய பகுதியைப் பாருங்கள்
நிரம்பிய பகுதியைப் பாருங்கள் கோப்பையின் நிரம்பிய பகுதியை நோக்கினால், சிறிதளவாவது கிடைக்கும். கோப்பையின் காலியான பகுதியை நோக்கினால், ஒன்றுமே கிடைக்காது! வாழ்க்கையும் அதே போல தான். இருப்பதைக் கொண்டு இன்புறுவோம். இல்லாததைப் பற்றி முறையிட்டு வருந்த வேண்டாம்.
நண்பராக்கிக் கொள்ளுங்கள்
நண்பராக்கிக் கொள்ளுங்கள் தூரத்திலிருந்து பார்த்தால், புரியாத உருவம் ஓர் ஆவி போல தெரியும். அருகில் சென்றால், அதுவும் பல விதத்தில் உங்களைப் போல ஒரு மனிதர் தான் என்று புரியும். ஒருவரை அறிந்துக் கொள்ளாத போது, முக்கியமில்லாத பேதங்கள் மட்டும் தெரியும், பயமும் தோன்றும். அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்று தான் தெரியும்.
எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது
எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எப்படி நடக்கிறதோ அப்படியே எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது. எப்போது மனம் அதற்கு மாறாக தொந்தரவு செய்து குறை சொல்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக இருந்து, மனத்தை வேறெங்காவது போகச் சொல்லுங்கள்.
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை உங்கள் அற்பமான விருப்புகள் வெறுப்புகள் இவற்றில் எதிலாவது உங்களுக்கு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், அதை நீங்கள் மற்றவர் ஒருவருக்கு தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் அதை வரவேற்கவில்லையெனில், அதைப் பற்றி அவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வழி உங்களுக்கு உள்ளது, மற்றவர் அவர் வழியில் போகட்டும். சில சமயம் நாம் மற்றவர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளிக்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக மற்றவர்களுடன் போராடுவது நேரத்தை வீணக்குவதாகும். அதனால் பயனொன்றும் விளைவதில்லை. ஒருவர் மீது அன்பு செலுத்துவதாலும், …
கருணை தான் முக்கியமான விதி
கருணை தான் முக்கியமான விதி வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ளவோ, அல்லது மணம் புரிந்துக் கொள்ளவோ ஒரு துணைக்காக நீங்கள் தேடும்போது, “கருணையை” முக்கிய கட்டளை விதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவரோ அவளோ தொழிற்பண்பட்டவராகவோ, செல்வந்தராகவோ, அழகானவராகவோ அல்லது திறமையானவராகவோ இருந்தால் அது ஒரு மிகவும் சிறந்தது தான். ஆனால் இவையெல்லாம் நீடிக்காமல் போகலாம், அல்லது சிறிது காலம் கழித்து அவ்வளவு முக்கியமில்லாமல் போகலாம். ஆனால் கருணை எப்போதும் மிகவும் அவசியமாக இருக்கும், எப்போதும் மேலும் மேலும் தேவைப்படும். கருணை தான் மருந்து. கருணை தான் …
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்!” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில சமயம் அவர் விருப்பப்படி செய்ய விடுவதும் சகிப்புத்தன்மை தான்.
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம் மக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும், மற்றவர்களுக்கெல்லாம் வேறு விதிகளும் ஏன் இருக்க வேண்டும்? நமது ஊதியமோ அல்லது நடத்தப்படும் விதமோ நிர்ணயிப்பது நமது திறமைகளும், தகுதியும், சிநேகமான நடத்தையும் தான் காரணமாக இருக்க வேண்டும்; மற்ற எதுவும் இல்லை. இரட்டை …