Vasundhara

தமிழ் இதழ்

மஹாகவி சுப்ரமண்ய பாரதி

தமிழ் இதழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்.

MEANING IN ENGLISH

TAMIL (By Maha Kavi Subramaniya Bharathy)

Transalation into English by Vasundhara

Of all the languages we know, there is none as sweet as Tamil;
Live savages, beasts, having the whole world ridiculing us, with bad character,
With the name as Tamilians, is it good to live here this way? Tell me!
We have to enable the spreading of the melodious sound of Tamil all over the world.

Of all the poets we know, like Kamban, like Valluvar, like Illango,
There is no one born on this earth. This is the truth, not just flattery.
We are living like dumb, deaf and blind people, listen to my word!
If you want well-being, proclaim and thunder Tamil in all the streets!

We have to translate the Good Books of foreign countries into Tamil.
We have to write new books that will have endless fame.
There is no use in quietly telling each other old stories.
If there is genuine talent in our writing, foreign countries must revere and adore them.

If there is true Light in our Heart, Light will emerge in our words.
Like flowing floods from rain, if our art and poetry flood profusely,
Those blind people who have fallen in a pit, will get eyes and will attain good status.
Those who have seen the wonderful taste of the profound Tamil, they would have seen the greatness of Immortality.

Convert the letters zh to ழ in the text below.

TAMIL (By Maha Kavi Subramaniya Bharathy)

yaam arindha mozhigaLilae tamizhaipol inidhaavadhu engum kaaNom
paamararai, vilangugaLai, ulaganaithum igazhchi solla paanmai kettu
naamamathu tamizharena kondu ingu vaazhnthiduthal nandro? solveer
thaemadhura thamizhosai ulagamengum paravumvagai seithal vendum

yaamarindha pulavarilae Kambanaipol VaLLuvaraipol Illangovaipol
bhoomidhanil yaangkaNumae piRandhilai unmai, veRum pughazhchi illai
oomaiyaraai selvidargaLaai kurudargaLai vaazhgindoam, oru sol kaeLeer
semmuRa vendumenil thaeruvellam thamizh muzhakkam sezhikka seiveer

piRanaatu nallaRijnar saathirangaL thamizh mozhiyir peyarthal vendum
iRavaatha pugazhudaya pudhu NoolgaL thamizh mozhiyil iyatRal vendum
maRaivaga NamakuLLae pazhan kathaigaLai sollvathil or magimail illai
thiRamaiyaana pulamaiyenil veLiNaator athaivaNanja cheithal veNdum

uLLathil uNNmaioLi undayin vaakinilae oLi undaagum
veLLathin perukkai pol kalai perukkum kavi perukkum mevumaayin
paLLathil veezhnthirukkum kurudarellam vizhi petru pathavi koLvaar
teLLuttra thamizh amudhin suvai kandaar ingamarar siRapu kandaar

அண்மைய பதிவுகள்:

Vasundharaதமிழ் இதழ்

Comments 2

    1. Post
      Author
      Vasundhara

      Thank you! If you like, you can watch some of my Tamil Videos in the YouTube channel : “Vasundhara : Tamil”, and some of my English Videos in the YouTube Channel : “Vasundhara”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *