மதிப்பு மரம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

மதிப்பு மரம் வெறுப்பு என்னும் களைகளை வேறோடு நீக்கி, மன்னிப்பு என்னும் தண்ணீர் அளித்து, பெருந்தன்மை என்னும் வெய்யிலில், நட்பு என்னும் விதை விதைத்தால், அதன் பலனாக மதிப்பு என்னும் மரம் வளரும். பின்பு தன்னம்பிக்கை, சுயமரியாதை என்ற கிளைகள் தோன்றி, நல்லெண்ணங்களான இலைகளும் பரவி, மகிழ்ச்சி என்னும் மலர்களும், மன அமைதி என்னும் நறுமணமும், இறையருள் என்னும் கனிகளும் தப்பாது கிடைத்து வரும்.

Vasundharaமதிப்பு மரம்
Don't compel others t

மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் அடிக்கடி நம் கருத்துக்களை மற்றவரின் மீது திணிப்பது ஒரு கெட்ட வழக்கம்; குறிப்பாக அவர்களது தோற்றத்தைப் பற்றி. ஏதாவது ஒரு ஆலோசனை சொல்ல நாம் விரும்பினால், நாம் அதைக் கனிவாக சொல்ல வேண்டும்; மேலும் முடிவை அவர்களிடம் விட்டு விட வேண்டும். இது இருவருக்கும் எளிதாக அமையும், பதற்றத்தைக் குறைக்கும், உறவை முன்னேற்றவும் செய்யும். 

Vasundharaமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்