செயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்
நாம் செயல்களை சரியான காரணங்களுக்காக செய்ய வேண்டும். சிறந்த காரணம் என்னவெனில், அது நமக்கு உபயோகமாக இருப்பதுடன் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிப்பது தான். ஒரு செயலை வெறும் புகழ்ச்சிக்காகவும் புகழுக்காகவும் மட்டும் செய்தால், நாம் ஏமாற்றமடையக் கூடும். ஆனால், அதை நாம் விரும்புவதாலும், நாம் மன நிறைவு பெறுவதாலும் செய்தால், விளைவுகள் என்னவானாலும், நமது திறம்பட்ட முயற்சிகள் ஒரு காலும் வீணாகாது. மற்றவர்களும் அதை பாராட்டினால், அது நமக்கு மேலும் மகிழ்ச்சி தான்.