ஓ…மழையின் அழகு! விடிகாலையில் வானில் இடி முழக்கம் போல மெல்லிய ஒலி வந்தது. அடுத்த முறை ஒலி சிறிது அதிகரித்தவுடன், நான் நினைத்தேன், இது மழையாக இருக்கக்கூடுமோ? அல்லது இது ஒரு ஏமாற்றுதலோ, மனத்தோற்றமோ, கற்பனையோ? பிறகு மூன்றாவது, நான்காவது இடியோசையின் பேரொலி எழுந்தவுடன், இது உண்மை அனுபவம் தான் என்று புரிந்தது! மழை முதலில் மெல்லென, மெல்லிய தூரலுடன் ஆரம்பித்தது, காண மகிழ்வான காட்சியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக பெருகி, விடா மழையாக பொழிந்தது. ஓ, மழைப்பொழிவின் அற்புதமான இசை! மழையால் …