எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது
எண்ணங்கள் கடலின் அலைகள் போல மனதில் ஏற்படுகின்றன. அவை நமது மன நோக்கத்தைச் சார்ந்தே எழுகின்றன. நமது நோக்கம் தவறாக இருந்தால், நாம் எல்லாவற்றையும் தவறாகவே தான் காண்கிறோம். நமது நோக்கம் சரியாக இருந்தால், எதையும் சரியாக, சீரான விதத்தில் காண்கிறோம். விவேகமுள்ளவர்களின் மதி நுட்பமான சொற்களை அறிந்துக் கொண்டு சிந்தித்தால், நமது நோக்கம் அறியாமையிலிருந்து விவேகத்திற்கு மாறும்.