போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்
உங்கள் அன்பிற்குரியவரை – அவனையோ, அவளையோ – போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள். அவர் மீதுள்ள உங்கள் அன்பை சொற்களிலும் செயல்களிலும் காட்டுங்கள். இல்லையெனில் அவரை, அன்பும் பாராட்டுதலும் காட்டும் வேறு எவரிடமோ இழந்து விடக்கூடும். அவர் வேறு யாரின் அன்பையும் பரிவையும் நாட மாட்டார் என்று நீங்கள் சுயதிருப்தியுடன் சட்டை செய்யாமல் இருந்தால், நீங்கள் தவறாக இருக்கக் கூடும். இந்த விதத்தில் தான் ஒரு உறவு உடைகிறது, அல்லது தோல்வி அடைகிறது. நீங்கள் இளவயதினராக இருந்தாலும், வாழ்வின் நடுப்பகுதி நெருக்கடி பிரச்சனையைத் தவிர்க்க விரும்பினாலும், உங்கள் அன்பருக்கு உங்கள் அன்பு, பரிவு, பாராட்டுதல் முதலியற்றைக் காண்பிக்க நேரம் செலுத்துங்கள்.