சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்
சரியான சமயத்தில் காட்டும் கருணை நெடுந்தூரம் செல்லும். எப்போது கருணை தேவைப்படுகிறதோ, அப்போது அளிப்பது நல்லது; நமக்கு சௌகரியப்படும்போது அல்ல. செயல்களில் அன்பு தருவது – நோயுற்றவர்களை பராமரிப்பது, உணவளிப்பது, சுத்தம் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது போன்ற உதவிகள் மிகவும் சிறந்தது தான். ஆனால், வருத்தப்படுவோருக்கும் துயரத்தில் ஆழ்ந்தோர்க்கும் சொற்களிலும், ஒரு ஆதரவான அரவணைப்பிலும், நட்பிலும், உற்சாகப்படுத்துவதிலும் கருணை காட்டுவது அதை விட மேன்மையானது. கருணையே ஒரு சக்தி வாய்ந்த மருந்தாகும்.