ஆசையை பின்பற்று, எந்த விளைவுக்கும் தயாராக இரு
சிலர் சொல்கிறார்கள்… “ஆசைப்படு! மனதின் கனவுகளைத் தொடர்ந்துச் செல்!” ஏனெனில் இதைக் கேட்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவர் உண்மை சொல்பவராகவோ, விவேகமுள்ளவராகவோ இருந்தால், மேலும் சொல்வார்…”மன லட்சியங்களை, ஆசைகளைப் பின்பற்று! ஆனால், எந்த விளைவுக்கும் தயாராக இரு. ஏனெனில் நாம் முயற்சிகள் செய்யலாம், ஆனால் பலன்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. விளைவு எதுவானாலும் நீ முன் போலவே தான் உள்ளாய், சந்தோஷமாக இருப்பதில் மாற்றம் அவசியமில்லை.”
வசுந்தரா