கருணை தான் முக்கியமான விதி
வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ளவோ, அல்லது மணம் புரிந்துக் கொள்ளவோ ஒரு துணைக்காக நீங்கள் தேடும்போது, “கருணையை” முக்கிய கட்டளை விதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவரோ அவளோ தொழிற்பண்பட்டவராகவோ, செல்வந்தராகவோ, அழகானவராகவோ அல்லது திறமையானவராகவோ இருந்தால் அது ஒரு மிகவும் சிறந்தது தான். ஆனால் இவையெல்லாம் நீடிக்காமல் போகலாம், அல்லது சிறிது காலம் கழித்து அவ்வளவு முக்கியமில்லாமல் போகலாம். ஆனால் கருணை எப்போதும் மிகவும் அவசியமாக இருக்கும், எப்போதும் மேலும் மேலும் தேவைப்படும். கருணை தான் மருந்து. கருணை தான் அன்பு. கருணை தான் கடவுள்.