மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை
உங்கள் அற்பமான விருப்புகள் வெறுப்புகள் இவற்றில் எதிலாவது உங்களுக்கு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், அதை நீங்கள் மற்றவர் ஒருவருக்கு தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் அதை வரவேற்கவில்லையெனில், அதைப் பற்றி அவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வழி உங்களுக்கு உள்ளது, மற்றவர் அவர் வழியில் போகட்டும்.
சில சமயம் நாம் மற்றவர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளிக்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக மற்றவர்களுடன் போராடுவது நேரத்தை வீணக்குவதாகும். அதனால் பயனொன்றும் விளைவதில்லை. ஒருவர் மீது அன்பு செலுத்துவதாலும், அவருடன் பழகுவதாலும், நமது விருப்பு வெறுப்புகள் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டுமென்று பொருளில்லை. சிலவற்றில் நாம் மற்றவருடன் ஒத்துக்கொள்வோம், சில சமயம் ஒத்துக் கொள்ள மாட்டோம். அதில் தவறொன்றுமில்லை. உண்மையில், சிலர் விஷயத்தில், நாம் எவ்வளவு அவர்களை நம்ப வைக்க முயல்கிறோமோ அவ்வளவு அவர்கள் எதிர்ப்பார்கள், வாதிடுவார்கள். எனவே, எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்!