விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்
தவறுகள் ஏற்படுகின்றன. எல்லோரும் தவறுகள் செய்கின்றனர். அது பரவாயில்லை. எது சரியில்லையென்றால், செய்த தவறுக்கு கூடிய சீக்கிரம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான். ஏதோ கட்டுப்பாடு இழந்து சொற்களோ செயல்களோ நிகழ்ந்து விட்டன. ஒருவேளை சோர்வு அல்லது அதிக கோபம் இருந்திருக்கலாம். மற்றவரும் பதிலுக்கு உங்களைப் போலவே நடந்துக் கொள்ளலாம், அல்லது அமைதியாக இருக்கலாம். ஆனால், சம்பவத்தை ஆரம்பித்தது நீங்களானால், அல்லது முதலாவதாக மற்றவரை துன்புறுத்தும் விதத்தில் பேசியதோ ஏதாவது செய்ததோ நீங்களானால், முதலில் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது உங்கள் பொறுப்பு தான். வெறும் மன்னிப்பு கேட்பதற்காக மட்டுமில்லை, அது நெருக்கடி உணர்வைத் தாழ்த்தி, முக்கியமாக உங்களுக்கு மன அமைதி தரும். இல்லையெனில், நாள் முமுவதும் இதனால் பாதிக்கப் படலாம். மன்னிப்பு கேட்பதால் நீங்கள் எந்த விதத்திலும் குறைவதில்லை; மன அமைதி இழக்காமல் இருக்க சாதுரியமாக இருக்கிறீர்கள், அவ்வளவு தான்.