சினத்தை தணிப்பது நல்லது
நமக்குப் பிடிக்காதது ஏதாவது நிகழ்ந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒருவர் ஒரு செயல் செய்யாததாலோ அல்லது தவறாக செய்ததாலோ ஏற்பட்ட தொல்லைக்காக அவரைக் குறை கூறுகிறோம். நமது சினத்தை நாம் யோசிக்காமல் சிதறியடிக்கும்போது, ஒரு நெருக்கடி நிலையும், சச்சரவும் ஏற்படுகிறது. இந்த சினத்தைத் தணித்துக்கொண்டு, சுட்டிக்காட்டாமல், அமைதியாக இடரை தெரிவித்து, தீர்வையும் அறிவுறுத்தினால், நல்ல பலன் கிடைக்கக் கூடும். மற்றவருடன் நமது உறவும் மேன்மைப் படும். சினத்தைக் கொஞ்சம் தணிப்போம். ஏனெனில் சினத்தால் ஒரு லாபமும் இல்லை.
~ வசுந்தரா