யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்
நம்மிடம் இனிமையாகவோ, கனிவாகவோ நடந்துக் கொண்டு உதவியும் செய்பவர்களை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்கு அண்மையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய பரிவையும் அன்பையும் நாம் புறக்கணிக்கக் கூடாது; அவர்களை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. உலகில் எதற்கும் அச்சாரம் இல்லை. உங்களுக்கு அன்பளித்து, பராமரித்து, அக்கறை கொள்பவர்களை பாராட்டுவதற்கு சிறிதாவது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.