எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன. எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது. பொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி! உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல அவர்களுக்கு பேரம் பேசுவது. …
நன்றியே சிறந்த மனப்பான்மை
நன்றியே சிறந்த மனப்பான்மை நாம் அனைவரும் சில சமயம் ஏற்கிறோம், சில சமயம் கொடுக்கிறோம். இப்படி தான் உலக நியதி செல்கிறது. மேலும், சிலர் ஏற்பதை விரும்புகின்றனர், சிலர் கொடுப்பதை விரும்புகின்றனர். இப்படி தான் மனிதர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஏதாவது தேவைப்படும் போது யாராவது அதை நமக்கு அளித்தால், நாம் மகிழ்கிறோம். சிலர் நாம் கேட்டால் கொடுக்கின்றனர், சிலர் நாம் கேட்காமலே கொடுக்கின்றனர். இந்த இரண்டு விதத்திலும், கொடுப்பவர் சிலர் சந்தோஷப்படுகின்றனர், ஏற்பவர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். சாதாரணமாக, ஒரு மனிதருக்கு யாராவது ஒரு குடும்பத்தினரோ, …
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய பலர் அப்படி செய்யாததற்குக் காரணம் தானத்தைப் பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளதாலும், மற்றோருக்கு தாராளமாகக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறியாததாலும், குடும்பத்தின் வழக்கப்படி நடப்பதாலும் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சுருங்கச் சொன்னால், நமக்கு …
நமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்…….
எனக்கு இந்த ஆச்சரியத்தில் ஒரு முடிவே இல்லை: நாம் மற்றவைகளை விட நம்மை தான் மிகவும் நேசிக்கிறோம், ஆனால் நமது அபிப்பிராயத்தை விட மற்றவர்களின் அபிப்பிராயத்தில் அதிக நம்பிக்கை வைக்கிறோம். மார்க்கஸ் ஔரேலியஸ் எத்தனை சிந்தனையார்ந்த, விளக்கமான வாக்கியம் ! பல சந்தர்ப்பங்களில் இது உண்மையும் தான், இல்லையா ? நம்மில் பலருக்கு அவர்களது இயல்பான தன்மையிலேயே தன்னம்பிக்கை, மனத்துணிவு போன்ற தன்மைகள் உள்ளன. அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் தைரியமாக தமது முடிவை தாங்களே நிர்ணயித்து செயலில் ஈடுபட முடிகிறது. ஆனால் மற்றும் சிலர் நமது …