செருக்கு என்பது அறிவு இல்லை
மக்கள் பொதுவாக, ஒருவர் மிகவும் செருக்குடனும், தான் வலிமையுள்ளவர், உயர்ந்தவர் என்ற நினைப்புடனும் நடந்துக்கொண்டால், அவர் மிகவும் அறிவாளி என்று நினைக்கின்றனர். ஆனால், ஒருவர் நயமாக, இனிமையாக நடந்துக் கொண்டால், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கின்றனர். இவை தவறான கருத்துக்கள். அறிவு வலிமையாகும் என்பது உண்மைதான். ஆனால், வலிமை அல்லது செருக்கு அறிவாகாது.