அன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும்
நீங்கள் ஒருவருடன் அன்பு உறவை முடிக்க விரும்பினால், அதை மென்மையாகச் செய்யுங்கள். உங்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், வெறுக்க என்ன காரணங்கள் இருந்தாலும், மன விஷத்தை அவர் மீது சிதறாதீர்கள். ஏனெனில், ஒருவேளை உண்மையில் நல்லவரான ஒருவரை மிக ஆழ்ந்து வருந்தும் வகையில் நீங்கள் துன்புறுத்தலாம். மேலும்…..மற்றவருக்கு நீங்கள் அளிப்பது மீண்டும் ஒரு காலத்தில் உங்களுக்கே வந்து சேரும்.