போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்

Vasundhara வாழ்க்கை Leave a Comment

அழகிய தோற்றம்!
நமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்.......

போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்!

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் நான் ஒரு அமைதியான சாலையில் ‘கார்’ செலுத்திக் கொண்டிருந்தேன். காலநிலை சுகமாக இருந்தது. வானொலியில் இசை இனிமையாக இருந்தது. சாலை பெரும்பாலும் காலியாக இருந்தது. உலகத்தில் நான் மட்டும் தான் இருந்தது போல் தோன்றியது. நான் செலுத்திக் கொண்டிருந்த ‘காரும்’ வேக வரையறையை மிகுந்து செலுத்தத் தூண்டிக் கொண்டிருந்தது. நான் வேக எல்லைக்குள் செல்வது தான் வழக்கம். அல்லது போலீஸ்காரர் யாராவது வருகிறார்களா என்று கண்ணாடிகளில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பேன்!

இந்த முறை எப்படியோ நழுவ விட்டு விட்டேன்; சட்டம் என்னை பிடித்து விட்டது! ஒருவேளை போலீஸ்காரர் அடுத்த தெருவில் ஒளிந்தவாறு, யாராவது தவறுவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாரோ என்னவோ! அல்லது குறிப்பிட்ட அளவு ‘டிக்கட்’ கொடுத்து வரவில்லையெனில் அவரை சீட்டு கிழித்து விடுவார் என்று அவரது மேலாளர் சொன்னாரோ என்னவோ! அதனால் நான் சுகமாக அவரைத் தாண்டி வேக வரையறையை மிகுந்து செல்வதைக் கண்டு அவருக்கு மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! சில நொடிகளில் எனக்கு பின்னால் சுழலும் விளக்குகளைக் கண்டவுடன் சாலையின் பக்கவாட்டில் சென்று நிறுத்துவது தான் சரியென்று தெரிந்தது.

‘போலீஸ்’ அதிகாரி தன் ‘காரிலிருந்து’ இறங்கி என் ‘காரின்’ சன்னல் பக்கத்தில் வந்து நின்றார். தன் ‘டிக்கட்’ குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு என்னிடம் சொன்னார், “மேடம், வேக எல்லையை விட வேகமாக செல்கிறீர்கள் என்று தேரியுமா?’ நான் சொன்னேன், “‘ஓ, எனக்கு அது தெரியாது. எனக்கு இதுவறை ‘டிக்கட்’ கிடைத்ததே இல்லை. தயவு செய்து இந்த தடவை என்னை ஒரு எச்சரிக்கையுடன் விட்டு விடுகிறீர்களா?” அவர் பதில் அளித்தார், “மேடம், என்னால் அப்படி செய்ய முடியாது. இன்று நாங்கள் எல்லோரையும் வளைத்துக் கொண்டிருக்கிறோம். நான் உங்கள் ‘கார்’ இயக்கும் அனுமதிச் சீட்டைப் பார்க்க முடியுமா?” நான் அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். கடைசியில் அவர் சொன்னார், “இந்தாருங்கள் உங்கள் ‘டிக்கட்'”.

அவர் மேலும் தொடர்ந்தார், “நீங்கள் ‘டிக்கட்’ பணம் கட்டத்தான் வேண்டும். ஆனால் இந்த ‘டிக்கட்’ உங்கள் பதிவில் செல்லாமல் இருக்க நீங்கள் ஒன்று செய்யலாம்.” “அது என்ன?” என்று நான் கேட்டேன். அவர் பதிலளித்தார், “நீங்கள் ஒரு தனிப்பட்ட வகுப்புப் பாடம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு இந்த ‘டிக்கட்’ உங்கள் பதிவேட்டில் செல்லாது.”  “சரி. அப்படியே செய்கிறேன்.” என்று சொல்லி விட்டு நான் விவரங்களை வாங்கிக் கொண்டேன். “சரி, நீங்கள் போகலாம். கவனமாக காரோட்டுங்கள்!” என்று சொல்லி அன்றைய வேதனைக்கு ஒரு முடிவு கொடுத்து அந்த போலீஸ்காரர் அகன்றார். நானும் அவரை சபித்தவாறு என் வழியே சென்றேன்.

இப்போது தான் இந்த கட்டுரையின் தலைப்புக்கு ஏற்ற விஷயத்துக்கு வந்திருக்கிறேன் : “போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்!”  சில சமயம் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி கேட்பதற்கு முன்னால், அதன் பின்புலத்தை அறிவது அவசியம். இதுவறை அதை தான் நான் அளித்திருக்கிறேன்.

சில நாட்களுக்குப் பிறகு மேற்கூறிய வகுப்புக்குச் சென்றேன். அங்கே என்னைப் போல் மற்றும் பலர் இருந்தனர்.  மற்றவர்களும் என்னைப் போல தவித்துள்ளனர் என்று அது ஒரு விதத்தில் மகிழ்ச்சி தந்தது!  இது உண்மை என்று  நினைக்காதீர்கள்! விளையாட்டுக்காக சொல்கிறேன்!

பல மணி நேரங்களுக்கு சோர்வளிக்கும் விரிவுரைகளுக்கும், பல கொட்டாவிகளுக்கும் பிறகு, சரியான விதத்தில் ‘கார்’ செலுத்துவதைப் பற்றி சில உதவிக் குறிப்புகளும் கிடைத்தன.  இதன் பின் வந்தது கேள்வி-பதில் நேரம்.  போலீஸ்கார ஆசிரியர் எல்லோரையும் ஓரிரு கேள்விகள் கேட்டு வந்தார். பொதுவில் அவர் எல்லோரிடமும் அவர்களின் விடைகள் தவறு என்றும், சரியான பதில் என்னவென்று மிக்க களிப்புடன் சொல்லிக்கொண்டும் இருந்தார்!  பிறகு என் முறை வந்தது.  ஆசிரியர் என்னைக் கேட்டார்,  “மிக வேகமாக செல்லும் பாதையில் (lane), நீங்கள் வேக எல்லைக்குள் சென்றுக் கொண்டிருக்கும் போது, உங்கள் பின்னால் ஒரு ‘கார்’ உங்களை வேக எல்லை மீறி போகத் தூண்டினால் (tailgate), நீங்கள் என்ன செய்ய வேண்டும்?”

கொஞ்ச நாளுக்கு முன்னால் தான் மிகவும் வேகமாக போனதற்கு ‘டிக்கட்’ கிடைத்திருக்கிறது!   அதனால் நான்  மிகவும் நேர்மையாக சொன்னேன், “நான் எந்த சரியான வேகத்தில் போய்க் கொண்டிருந்தேனோ,  அதே வேகத்தில் தொடர்ந்து போக வேண்டும்.  சரி தானே?” இதைக் கேட்டு ஆசிரியர் என்னைப் பற்றி பெருமைப்படுவார் என்று எண்ணினேன்! அதற்கு பதிலாக அவர் முகம் சிறிது சிடுசிடுத்தது.  முகச்சுளிப்புடன் அவர் கூறினார், “இல்லை! நீங்கள் அப்படி செய்யக் கூடாது. ஒருவேளை உங்கள் பின்னால் வருபவற்கு நெருக்கடியான நிலமை இருக்கலாம்.  ஒரு பெண்மணியின் பிரசவத்திற்காக வேகமாக செல்ல வேண்டியிருக்கலாம். அந்த அவசரத்தால் அவர்கள் ‘டிக்கட்’ பெறுவதற்குக் கூட ஆட்சேபிக்காமல் செல்லலாம்.  அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், அடுத்த குறைந்த வேகத்தில் செல்லக்கூடிய பாதைக்கு சென்று, வேகமாக செல்ல விரும்புபவர்களை அவர்கள் வழியே போக விட வேண்டும்.”

அவர் சொன்னதை நான் மிகவும் வியந்தேன்.  இது எத்தனை உண்மை!  அந்த போலீஸ்காரர் எனக்குக் கொஞ்சம் தொல்லை கொடுத்தாலும்,  ஆசாமியின் சொற்களில் அர்த்தம் இருந்தது.   நான் நேர்மையாக நடந்துக் கொள்ள நினைத்தால், மற்றவர்களின் செயல்களில் தொந்தரவு தர வேண்டும் என்று பொருளா என்ன? அவரவர்கள் தங்கள் நிலமை, சுற்றுப்புறம், நம்பிக்கைகள் – இவற்றுக்கு தகுந்தபடி, எது சரி, எது தவறு என்று நிர்ணயித்து பின்பற்றுவார்கள்.  அவர்கள் சட்டத்தை மீறினால், சட்டம் அவர்களை பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் நான் சட்டத்தை என் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கற்றுக் கொள்ள எத்தனை அழதிய பாடம்!  அதுவும் இந்தப் பாடம் வாழ்க்கையின் எந்த பகுதியிலும், எப்போதும் உண்மையாக உறைகிறது. “நீங்களும் வாழுங்கள், மற்றவைகளையும் வாழ விடுங்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள்!”

நான் அன்று ‘கார்’ செலுத்துவதைப் பற்றி சில நல்ல விஷயங்கள் கற்றுக் கொண்டேன், உண்மை தான். ஆனால் அதை விட முக்கியமாக கட்டாயம் வாழ்க்கயைச் செலுத்துவதைப் பற்றி கற்றுக் கொண்டேன். இதில் சந்தேகமே இல்லை!

அழகிய தோற்றம்!
நமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்.......
Vasundharaபோலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *