கர்நாடக சங்கீதம்…ஓர் அழகிய காட்சி
பொது விளக்கம்
- கர்நாடக சங்கீதம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இசை. கர்நாடக சங்ககீதத்தின் பாடல்கள் பெரும்பாலாக கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளால் இயற்றப் பட்டன : திரு தியாகராஜர், திரு முத்துஸ்வாமி தீக்ஷதர், திரு ஸ்யாமா சாஸ்திரி என்போராவர். திரு புரந்தரதாஸர் கன்னடத்தில் பாடல்கள் வழங்கினார். உண்மையில், எவ்வளவோ மகத்துவமான ஆண், பெண் முனிவர்களும் கவிகளும் எத்தனை ஆயிரம் பாடல்கள் அளித்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோருடைய பெயர்களையும் இங்கு சொல்ல முடியாது. அவர்களுடைய பாடல்கள் கடவுளின் மீதுள்ள பக்தியினால் மழை போல் பொழிந்ததாக தெரிகிறது.
- கர்நாடக சங்கீதம் பல மொழிகளில் இருக்கிறது. அவை சமஸ்க்ருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இன்னும் பல மொழிகளிலும் உள்ளன.
இசைக் கருவிகள்
- கச்சேரியில் பொதுவாக தம்பூரா, வயலின், ம்ருதங்கம், இவை மூன்றும் பயன்படுத்தப் படுகின்றன. தம்பூரா என்ற இசைக் கருவி, சில இசை சுருதி குறியீடுகளை கொடுத்து பாடகருக்கு சுருதி சேர்த்து பாட உதவி செய்கிறது. அவை கீழ் ‘ஸா’, மத்திய ‘பா’, உயர ‘ஸா’ என்ற பண்களாகும். சில பாடல்களுக்கு ‘மா’ தேவைப் படுகிறது. இவை எல்லாவற்றையும் வைத்து சுருதியை நிர்ணயிக்க முடிகிறது. சுருதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும். பாடுபவரின் குரலையும், குரலின் எல்லைகளையும் வைத்து சுருதி நிர்ணயிக்கப் படுகிறது. கச்சேரிக்கு முன்னால் தம்பூராவில் சுருதி சேர்க்கப் படுகிறது. வயலினும் ம்ருதங்கமும் பக்க வாத்தியங்களாக பயன்படுத்தப் படுகின்றன.
- சில சமயங்களில், சில புகழ் மிக்க கலைஞர்களுக்கு ‘கடம்’, ‘கன்ஜீரா’ போன்ற இசைக் கருவிகள் இசைக்கப் படுகின்றன. ‘கடம்’ இசைக்காகவே உண்டாக்கப் பட்ட ஒரு பெரிய பானை போன்ற கருவியாகும். ‘கன்ஜீரா’ ஒரு வினோதமான ஒலி தரும் கருவியாகும். தாள வாத்தியங்கள் மட்டும் தனியாக நிகழும்போது, அந்த கலைஞர்களுக்குள் ஒரு இசைப் பந்தயம் நடப்பது வழக்கம்.
அடிப்படை வரையறைகள்
- ராகம்: கர்நாடக இசையின் முக்கிய அடித்தளம் ராகமாகும். ஸ, ரி, க, ம, ப, த, நி – என்ற ஏழு ஸ்வரங்கள் அல்லது குறியீடுகளைக் கொண்டு ஒரு தனிப்பட்ட இசை அமைப்பு உண்டாகிறது. இதுவே ராகமாகும். ‘ஸ’ என்பதே எட்டாவது உயர ‘ஸ’ என்ற ஸ்வரமாகவும் அமைகிறது.
- தாளம்: ஆனால் ஒரு பாடலை இசைக்க ராகம் மட்டுமில்லை, தாளமும் மிகவும் அவசியம். பலவேறான தாளங்கள் உள்ளன. சில தாளங்கள் மிகவும் கடினமான அமைக்கப் பட்டுள்ளன.
- ஆலாபனை: இது தாள வாத்தியங்கள் இல்லாமல், வெறும் தம்பூராவை மட்டும் உபயோகித்து ராகத்தின் அழகையும், நுணுக்கங்களையும் இசைக்கும் செயலாகும். பாடகரின் திறமைகளும், கற்பனைகளும் வெளிப்பட இது ஒரு வாய்ப்பாகிறது. பாடலின் நிலைப்பாடு என்னவோ அதன்படி ஆலாபனை சுருக்கமாகவோ அல்லது மிக நீளமாகவோ அமையலாம்.
- க்ருதி: இது தான் பாட்டு அல்லது பாடலாகும்.
- ஸ்வரம்: ஸ்வரம் போடுதல் என்று வழக்கமாக சொல்லப்படுவது பின் வருமாறு. ஒரு பாடலை பாடி முடிக்கும் சமயத்தில், ராகத்துக்குத் தகுந்தபடி, வெறும் ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஸ்வரங்களை மட்டும் உபயோகித்து பாடுவது ‘ஸ்வரம் போடுதல்’ என்று வழங்குகிறது. இது பாடகர், வயலின் வாசிப்பவர், ம்ருதங்கம் வாசிப்பவர், இங்த மூவருக்கிடையே இசை மழையாக பொழிவது அற்புதமான செயலாகும். இந்தப் பகுதி பாடலின் முதல் வரியைப் பாடி முடிகிறது.
- தனி ஆவர்த்தனம்: இது ம்ருதங்கம் மட்டும் வாசிக்கப்படும் பகுதியாகும். ம்ருதங்கக் கலைஞரின் திறமையையும், ஆற்றலையும் காண்பிக்கவும் பாராட்டவும் இது ஒரு வாய்ப்பு தருகிறது.
செய்முறை
- ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரி வழக்கமாக “வர்ணம்” என்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இது குரலுக்கு நல்ல பயிற்சி அளிக்கிறது. அடுத்து, விநாயகர் எல்லா இடர்களையும் நீக்கி வெற்றி தரும் தெய்வமாக கருதப்பட்டு, கடவுளின் அந்த அம்சத்தின் மீது பாடல் இசைக்கப் படுகிறது. பாடலின் ஆரம்பத்தில் ஆலாபனை நிகழ்கிறது. பிறகு பாடல் தாளத்துடன் பாடப்படுகிறது. பாடலின் முடிவில் சில சமயம் ஸ்வரம் போடுதல் நிகழ்கிறது.
- நடுவில் எங்காவது ஒரு “ஆலாபனை-பாடல்-ஸ்வரம்” நிகழும். அதற்குப் பின் “தனி ஆவர்த்தனம்” நிகழும். சில கச்சேரிகளில், ஒரு கடினமான, சிக்கலான பாட்டின் ராக ஆலாபனையும், தாளத்துடன் பாட்டின் முதல் வரியும், பிறகு ஸ்வரங்களும் வழங்கப் படுகிறது. இதன் பெயர் ராகம்-தானம்-பல்லவி.
- கச்சேரியின் இறுதியில் எளிதான, இனிமை மிகுந்த பாடல்கள் வழங்கப் படுகின்றன. கடைசி நிகழ்ச்சியாக “மங்களம்” என்ற பாடல் அளிக்கப் படுகிறது.