மற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது நாம் நம்மை ஒருபோதும் மற்றவருடன் ஒப்பிடக்கூடாது. வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட சிலர் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள், சிலர் தாழ்வான நிலையில் இருப்பார்கள். மற்றவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம், கற்றுக்கொள்வது நல்லதுமாகும். ஆனால் நமது வெற்றியையும் தோல்வியையும் மற்றவர்களை வைத்து நாம் அளவிடக் கூடாது. நாம் நமது திறமைகளுக்கும் ஆற்றல்களுக்கும் ஒப்பாக வாழ்கிறோமா என்று தான் அளவிட வேண்டுமே தவிர, மற்றவர்களின் வாழ்வில் நடப்பதைக் கொண்டு நாம் நம்மை அளவிடக் கூடாது.
No comparison with others
No comparison with others We should never compare ourselves with others. There will always be someone better or worse than us in life. We can, and should learn from others. But we should not measure our success or failure based on other people. We should only see if we measure up to our own capabiliities, not to what happens in …