மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்
போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்

அழகிய தோற்றம்!

நீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள்! பெண்ணோ ஆணோ, நமது  முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான்!  உண்மை என்னவெனில்,  எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பிறப்பதில்லை. நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.  உட்புறத்திலும் வெளிப்புறத்திலும்,  உடல், மனம் – இவற்றின் முன்னேற்றத்திற்கு  கற்றல் அவசியம்.

முதலாவதாக, அழகிய தோற்றத்தின் அடிப்படைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவை: ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, தியானம்.  அதாவது, உடல் நலம், மன நலம், இரண்டையும் கண்காணித்து முன்னேற்றுவது மிகவும் அவசியம். இவை எல்லா வயதினருக்கும் அவசியம்.

நாம் பொதுவில் எதைச் செய்தாலும் நமது பழக்க வழக்கத்தினால் தான் செய்கிறோம். அதனால் நமது தவறான வழக்கங்களை குழந்தையின் அடிகள் போல் சிறிது சிறிதாக மாற்றுவது அவசியம். கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, இவற்றுக்கு உயர்ந்த எல்லைகள் நிர்ணயித்துக்கொள்வதும், தீர்மானங்கள் செய்துக் கொள்வதும் சிலருக்கு உதவலாம். ஆனால் இதற்கு மன வலிமை தேவைப்படும். பெரும்பாலானோருக்கு சிறிய எல்லைகள் வைத்துக் கொண்டு பின்பற்றுவது தான் சரியானது, போதுமானது கூட.

தரமான மிதமான உணவு, சாதாரண மிதமான உடற்பயிற்சி  – இவை நம்மில் புத்துணர்ச்சி உண்டாக்கி,  உற்சாகத்தை ஏற்படுத்தி, மகிழ்ச்சி அளிக்கும். 

உடல் நலனோடு மன நலம் மிகவும் முக்கியம். நமது மனநிலை சரியில்லையெனில், நமது வெளித்தோற்றமும் பாதிக்கப்படும்.  மன நலனுக்காக, பல தியான முறைகளும், யுக்திகளும் உள்ளன.  தியானம், ஆழ்சிந்தனை, யோக உடற்பயிற்சி, சுவாச முறைகள், அமைதி தரும் சொற்களை கேட்பது, ஞானியரின் அறிவுரைகளைப் பற்றி சிந்திப்பது – இவை அனைத்தும் நம்மை ஆசுவாசப் படுத்தும்.

இதெல்லாம் மிகவும் சுலபம் என்று யாராவது சொன்னால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். முயற்சியும் உழைப்புமின்றி எதுவும் கிடைக்காது.  அதனால் நீங்கள் தோற்றத்திலும் உணர்விலும் முன்னேற்றத்தை விரும்பினால், முயற்சி செய்ய வேண்டும். சில சமயம் மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பயிற்சிகள் செய்வது எளிதாக இருக்கலாம்.

சுருங்கச் சொன்னால், நாம் நமது உடல்நலனையும் மனநலனையும் கண்காணித்துப் கவனித்துக்கொண்டால், தன்னியக்கமாக அழகிய தோற்றம் ஏற்படும்!  இதில் சந்தேகமே இல்லை!

மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்
போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!
Scroll to Top
WP-Backgrounds Lite by InoPlugs Web Design and Juwelier Schönmann 1010 Wien