சுய தன்மைகள் மூன்று குணங்கள்.
1) மனத் தூய்மை. 2) அதிக விருப்பு, பேருணர்ச்சி, வீரம். 3) மழுங்கிய அறிவு, சோம்பல், கிளர்ச்சியின்மை.
இந்த மூன்று குணங்களும், வித விதமான விகிதத்தில், எல்லா மனிதர்களிலும் உள்ளன. ஒவ்வொரு தன்மையிலும் வெவ்வேறு அளவில் இவை மூன்றும் உள்ளன.
மனத் தூய்மை மட்டுமே உள்ளவர்கள் ஞானியர் ஆவர்.
பெரும்பாலும் மனதில் தூய்மை அதிகமாக இருக்கும் மனிதர் – நற்பண்புகள் கொண்டவரும், அறிவும் விவேகமும், ஆன்மீகத்தில் விருப்பம் கொண்டவர்களும், அரசர்களுக்கும் சமூகத்துக்கும் ஆன்மீக அறிவுரைகள் அளிப்பவர்களூம் – ஆவர்.
பெரும்பாலும் பேருணர்ச்சியும், வீரமும், செயல்களில் விருப்பத்தையும் கொண்டவர்கள் – அரசர்கள், வீரர்கள், வெளிப்புற செயல்களில் அதிக விருப்புடன் ஈடுபடுபவர்கள் – ஆவர்.
பெரும்பாலும் சோம்பலும், கிளர்ச்சியின்மையும் கொண்டவர்கள் – மழுங்கிய அறிவும், மந்தமும், விசாரணை செய்யும் திறனில்லாதவர்களாகவும் – ஆவர்.